மறைந்திருந்து பிடிப்பதன் மர்மம் என்ன?
பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் இப்பொழுது பெரும்பாலும் மறைவாக இருந்தே வாகனங்களை மறித்துப் பிடிக்கின்றனர் என்பதனை நாம் அவதானிக்க முடிகின்றது.
பின்னர் வேகம் உள்ளிட்ட இன்னோரன்ன காரணங்களின் அடிப்படையில் திடீரென முன்பாக வந்து வாகனங்களை மறித்து நிறுத்துமாறு சைகையிடுகின்றனர்.
இதனை சற்றும் எதிர்பாராத வாகன சாரதிகள் திக்குமுக்காடுகின்றனர்.
இதன் பின்னர் சில போக்குவரத்துப் பிரிவு உத்தியோகத்தர்கள் சாரதி அனுமதிப் பத்திரத்தை தம்வசம் எடுத்துக்கொண்டு பல்வேறு கேள்விக் கணைகளை தொடுப்பதுடன், மோட்டார் வாகன கட்டளை சட்டத்தின் விதிமுறைகளைப் பயன்படுத்தி அபராதம் அறவிடுகின்றனர்.
மேலும் சில போக்குரவத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அபராதத் தொகையின் அளவைக் கூறி, அதிலிருந்து சாரதிகளை தப்பித்துக் கொள்ளச் செய்வதற்காக தமக்கு ஒருதொகையை (இலஞ்சமாக) வழங்கக் கோருகின்றனர்.
இன்னும் பல சந்தர்ப்பங்களில் சாரதிகளே முந்திக்கொண்டு தமது சாரதி அனுமதிப் பத்திரங்களை காட்டும்போது அதற்குள் ஒருதொகையை (இலஞ்சம்) வைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் கொடுக்கின்றனர்.
இந்த நிலைமை எப்போது மாறும்?
இதனை ஏன் எவருமே கண்டுகொள்வதில்லை?
சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
மரங்களின் பின்னாலும் மதில்களின் பின்னாலும் மறைந்திருந்து இலஞ்ம் பெறுவதில் இலங்கை காவல் துறையினர் மிக சிறந்து காணப்படுகின்றனர். ஏமாறும் சாரதிகள் இருக்கும் வரை ஏமாற்றும் போலிஸ் காரர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
ReplyDelete