உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கண்டி போகம்பறை சிறையில் மகனைப் பார்வையிட வந்த தாய் கைது

கண்டி போகம்பரை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை பார்வையிட வந்த தாய் ஒருவர், வாழைப்பழத்திற்குள் இரண்டு சிம் அட்டைகளை மறைத்து கையளிக்க முற்பட்டதனை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

திருகோணமலை பிரதேசத்திலிருந்து கண்டி போகம்பரை சிறையிலுள்ள தனது மகனை பார்வையிட தாயும், உறவினர்கள் சிலரும் நேற்று (16-07-2011) சனிக்கிழமை மாலை போகம்பரை சிறைக்கு வந்துள்ளனர்.

மகனுக்காக எடுத்து வந்த உணவுப் பொதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்டபோது வாழைப்பழத்திற்குள் இரண்டு சிம் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தாய் மற்றும் உறவினர்கள் உட்பட நால்வரை கண்டி பொலிஸாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

இவர்களைத் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. தற்போது சிறைச்சாலை அதிகாரிகள் விழிப்புடன் செயற்படுகின்றனர். ஏனென்றால் உலகின் மிகப் பெரிய தமிழினப் படுக்கொலையாளி என தமிழக தலைவர்களால் வர்ணிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தான். இவ்வாறே அதிகாரிகள் செயற்படுவார்களாயின் சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த முடியும்.

    ReplyDelete