9 வருடங்களின் பின்னர் ஷார்ஜாவில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஷார்ஜா மைதானத்தில் சுமார் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கை - பாகிஸ்தான்அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு இருநாட்டு கிரிக்கெட் நிறுவனங்களும் உடன்பட்டுள்ளன.
இரண்டு அணிகளுக்கும் இடையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அதிக எண்ணிக்கையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஷார்ஜா மைதானத்திலேயே நடத்தப்பட்டுள்ளதுடன், 2003 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பிரபல அணிகள் பங்குபற்றும் போட்டிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு அரபு இராஜ்ஜியத்தின் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
ஷார்ஜா மைதானத்தில் இதுவரை சுமார் 200 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் 24 போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன.
2010 ஆம் ஆண்டு இந்த மைதானம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கான மைதானமாக பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து, பிரபல அணிகள் மோதும் போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை.

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு 20 க்கு 20 போட்டித் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
நன்றி - கிரிக்இன்ஃபோ
No comments