உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கண்டி எசல பெரஹரா வைபவம் நாளை ஆரம்பம்


வரலாற்றுப் புகழ்மிக்க கண்டி எசல பெரஹரா நாளை 4 ஆம் திகதி (ஓகஸ்ட் 2011) இரவு ஆரம்பமாகின்றது.

நாளை முதல் 8 ஆம் திகதி வரை கும்பல் பெரஹரா ஊர்வலமும் , 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை விசேட ரந்தோலி பெரஹரா ஊர்வலமும் நடைபெறவுள்ளது.

14 ஆம் திகதி அதிகாலை இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் பகல் பெரஹரா ஊர்வலம் இடம்பெற்று கண்டி எசல பெரஹரா நிறைவடையும்.

இதன்பின்னர் பெரஹரா நிறைவுபெற்ற செய்தியை அறிவிப்பதற்காக கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் தியவதன நிலமே தலைமையிலான பஸநாயக்க நிலமேக்கள் மற்றும் பெரஹரா ஊர்வலத்தில் பங்குபற்றிய கலைஞர்கள் ஆகியோர் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு செல்வார்கள்,

அங்கு ஜனாதிபதி இவர்களை வரவேற்பார்.

இதன்போதி தியவதன நிலமே, பெரஹரா நிறைவுபெற்ற செய்தி அடங்கிய பேழையை ஜனாதிபதியிடம் கையளிப்பார்.

இதனைப் பெற்றுக்கொள்ளும் ஜனாதிபதி, பெரஹரா ஊர்வலத்தில் பங்குபற்றிய சிறந்த கலைஞர்களை கௌரவித்து பரிசில்களை வழங்குவார்.

இதனையடுத்து அனைவருக்கும் தேநீர் விருந்துபசாரம் வழங்கி ஜனாதிபதி உபசரிப்பார்.
எசல பெரஹராவின் சில முக்கிய நிகழ்வுகள்




No comments