லிபிய தலைநகரின் பச்சை சதுக்கம் கிளர்ச்சியாளர் வசம்
கர்ணல் கடாஃபியை லிபிய கிளர்ச்சியாளர்கள் நெருங்கியுள்ளனர்
கர்ணல் முவம்மர் கடாஃபியின் 42 வருட ஆட்சிக்கு எதிராக கடந்த ஆறு மாதகாலமாக ஆட்சிமாற்றத்தை வலியுறுத்தி நேட்டோவின் ஒத்துழைப்புடன் கிளர்ச்சியாளர்கள் முன்னெடுத்து வந்த போராட்டம் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது.
பச்சை சதுக்கம் கிளர்ச்சியாளர் வசம்
லிபிய கிளர்ச்சியாளர்களுக்கும், லிபிய படையினருக்கும் இடையில் தலைநகர் திரிபோலியிலும், அதனை சூழவும் கடந்த ஒரு நாள் நடைபெற்ற பாரிய மோதல்களை அடுத்து திரிபோலியின் பச்சை சதுக்கத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
![]() |
பச்சை சதுக்கத்தை கைப்பற்றிய மகிழ்ச்சியில் கிளர்ச்சியாளர்கள் |
கடாஃபியின் மகன்மார் தடுத்து வைப்பு
இந்த நிலையில் கடாஃபியின் மகன்களுள் ஒருவரான கர்ணல் சைப் அல் இஸ்லாம், கிளர்ச்சியாளர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், அவர் மீது துன்புறுத்தல் மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
![]() |
சைப் அல் இஸ்லாம் கடாஃபியின் மகன்களுள் ஒருவர் |
இதேவேளை, கடாஃபியின் மற்றுமொரு மகனான முஹம்மத், கிளர்ச்சியாளர்கள் தனது வீட்டைச் சுற்றி வளைத்துள்ளதாகவும், வெளியில் தொடர்ச்சியாக துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்பதாகவும், அல்-ஜஸீரா தொலைக்காட்சிக்கு தொலைபேசி ஊடாக தகவல் தெரிவித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைநகரின் பல பாகங்களிலும் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருவதுடன், கடந்த இரவு முதல் கிளர்ச்சியாளர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மார்ட்டிஸ் என்ற பச்சை சதுக்கத்தில் வெற்றி முழக்கம் மற்றும் மகிழ்ச்சி ஆரவாரங்களும் இடம்பெற்று வருகின்றன.
கடாஃபி தொடர்ந்தும் பாதுகாப்புடன்
![]() |
கடாஃபி தனது பாதுகாவலருடன் |
ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய வீரர்களின் பாதுகாப்புடன் கர்ணல் கடாஃபி தலைநகர் திரிபோலியில் இருப்பதாக நம்பப்படுகின்றதுடன், அவரின் பாதுகாப்புப் படையின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் கிளர்ச்சியாளர்களிடம் சரணடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு தகவல்கள் கூறுகின்றன.
தலைநகர் திரிபோலியிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் ஆங்காங்கே சிறு சிறு எதிர்த் தாக்குதல்கள் இடம்பெறுவதாக, கிளர்ச்சியாளர்களின் தேசிய மாற்றத்திற்கான பேரவையின் தலைவரான முஸ்தபா மொஹம்மட் அப்துல் ஜலீல் தெரிவித்துள்ளார்.
மோதல்களில் 1300 பேர் உயிரிழப்பு
![]() |
திரிபோலி மீது நேட்டை விமானத் தாக்குதல் |
கடாஃபி போராட அழைப்பு
எவ்வாறாயினும், தலைநகர் திரிபோலியை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்டெடுக்கும் போரை முன்னெடுக்குமாறு லிபிய அரச தொலைக்காட்சி ஊடாக கடாஃபி நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
கர்ணல் கடாஃபி மற்றும் அவரின் மகன்மார் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான இரகசிய பாதுகாப்பான வழியை, கிளர்ச்சியாளர்கள் விரும்பினால் வழங்கமுடியும் என்று தேசிய மாற்றத்திற்கான பேரவையின் தலைவர் ஜலீல் குறிப்பிட்டுள்ளார்.
No comments