ஹிந்தி தினம் 2011 கொண்டாட்டம் கண்டியில்...
கண்டி உதவி இந்திய தூதரகத்தின் பாரதீய கலா கேந்திர நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த வருடத்திற்கான "இந்தி தினம்_2011" அண்மையில் கொண்டாடப்பட்டது.
மலைநாட்டு பாரம்பரிய நடனம், கண்டிய நடனம் மற்றும் இந்திய கலாசார நிகழ்வுகள் என்பனவும் 2011 ஆம் ஆண்டின் "வருடாந்த இந்தி தின" கொண்டாட்டத்தில் முக்கிய அம்சங்களாக அறங்கேற்றப்பட்டன..
கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நடத்தப்பட்டு வருகின்ற இந்தி மொழி பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் இந்த நிகழ்வின்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கண்டி திரித்துவக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, கண்டி உதவி இந்திய தூதுவர் ஆர். கே. மிஸ்ரா ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments