உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இது சாத்தியப்படுமா???

சபரகமுவ மாகாண சபைக்கான தேர்தலில் இம்முறை தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதற்காக ஆளும் மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த மூன்று பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து போட்டியிட முன்வந்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்...


மலையக தமிழ் அரசியல் கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் தலைநகரை மையமாகக் கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய தமிழ் அரசியல் கட்சிகளே இவ்வாறு உடன்பாட்டிற்கு வந்துள்ளன.

கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பொதுப் பட்டியலொன்றின் கீழ் இந்த மூன்று கட்சிகளும் போட்டியிட இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது.

சபரகமுவ மாகாணத்தில் சுமார் இரண்டு இலட்சம் தமிழ் வாக்காளர்கள் இருந்தபோதிலும் கடந்த காலங்களில் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு நீண்டகாலமாக அந்த மாகாணத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாத துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டது.

மலையக தமிழ் மக்கள் தொடர்பில் இந்த கட்சிகள் சிறந்த நகர்வினை மேற்கொண்டுள்ளதாகவே எண்ணத் தோன்றினாலும்.. எத்தனை நாளைக்கு இந்த கூட்டு என்பதில் சந்தேகம் இல்லாமலும் இல்லை..

காரணம் வரலாற்றில் மலையக தமிழ் அரசியல் கட்சிகள் நீண்டகாலம் புரிந்துணர்வுடன் ஒன்றிணைந்து செயப்பட்டதும் இல்லை.. பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் வளம்பெற காத்திரமான சேவையை ஆற்றியதுமில்லை.. மலையத்தில் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை வகித்தபோதிலும் அந்த மக்களுக்கான தார்மீகப் பொறுப்புகள் சரிவிர நிறைவேற்றப்படவில்லை என்பது வெளிச்சம்..

இந்த நிலையில் ஒரே சின்னத்தின் கீழ் சபரகமுவ மாகாண தேர்தலில் போட்டியிடவுள்ள இந்த மூன்று தமிழ் அரசியல் கட்சிகளும் தேர்தலின் பின்னரும் கைகோர்த்து ஓர் இலக்குடன் செயற்படுமா என்ற வினா எழுகிறது....???

இந்த நகர்வு மலையக தமிழ் மக்களுக்கு சாதகமானதா??? அல்லது பாதகமானதா???

No comments