ஊழல்வாதிகளுக்கு எப்போது தண்டனை கிடைக்கும்???

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சில செயற்பாடுகளை பார்த்தால், விபசாரிக்கும், சட்ட மாஅதிபருக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவுமில்லை போல் தென்படுகின்றது.
உண்மையாகவே வழக்குத் தொடர வேண்டியவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில்லை....
அரசியல் மேலிடத்தில் இருப்பவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதில்லை....
ஊழல் பேர்வழிகளைக் காப்பாற்றுவதற்காக வழக்குகளுக்குத் தேவையான சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காது வீண் காலதாமதம் மேற்கொள்ளல்.....
ஆனால் சாதாரண குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனைகள் விதிக்கப்படுவதற்காக நீதிமன்றங்களில் சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பாக பிரதிநிதிகள் ஆஜராகி சாட்சியங்களை முன்வைக்கின்ற நிலைமை தான் காணப்படுகின்றது.
இந்த நிலைமை நீடிக்கின்ற பட்சத்தில், எந்த ஊழலையும், மோசடிகளையும் ஒழித்துக்கட்டி, அவற்றோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்ற அதீத நம்பிக்கையில் மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்தார்களோ அதற்கான அர்த்தம் பொய்த்துப் போய்விடும்.
கடந்த ஆட்சியில் ஊழர் பேர்வழிகளாக அடையாளம் காணப்பட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்பினரே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவதற்கு வழிவகுத்துவிடுவதாக அமைந்துள்ளது.
இவ்வாறு ஊழல் பேர்வழிகளையும், அரசியல்வாதிகளையும் தொடர்ந்தும் காப்பாற்றும் காரியத்தை மிகக் கச்சிதமாக சட்ட மாஅதிபர் திணைக்களம் முன்னெடுப்பதை எவ்வாறு தான் விபரிக்கமுடியும்.
என்னவோ தொடர்ந்தும் மக்கள் தான் ஏமாற்றப்படுகின்றார்கள்...
#Politics #சட்ட_மாஅதிபர்_திணைக்களம் #ஜனநாயகம் #நல்லாட்சி #வாக்குரிமை