உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கண்டி வன்முறைகள் தொடர்பில் கைதானவர்களின் மேலும் சில நாசகார வேலைகள் அம்பலம்...

கடந்த வாரத்தில் (மார்ச் 5 முதல் 12 வரை) கண்டி மற்றும் சூழவுள்ள பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களின் மேலும் சில நாசகார வேலைகள் அம்பலமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்தி வரும் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினரால் இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.


சந்தேகநபர்களின் வாக்குமூலங்களின் பிரகாரம் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான மஹாசோன் பலகாயவின் தலைவரான அமித் வீரசூரியவின் கண்டி -குண்டசாலை பிரதேசத்தில் அமைந்துள்ள அலுவலகத்தை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர்.

இதன்போது இனங்களிடையே குரோதம் மற்றும் பேதங்களை ஏற்படுத்தும் வகையில் அச்சிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.





இதுதவிர கண்டியின் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக 423 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், ஏனைய பகுதிகளில் இருந்து 22 சம்பவங்கள் தொடர்பில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் குறித்து நாடு முழுவதும் 24சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், வாகனங்களை சேதப்படுத்தியதாக 65 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

கடந்த 4 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக 445 முறைப்பாடுகளும், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட 23 சம்பவங்களும் பதிவாகியிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வன்முறைச் சம்பவங்களுடன்  தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன முறுகல் மற்றும் வன்முறைகளைத் தூண்டும் வகையில் செயற்பட்ட 10 முக்கிய நபர்களும் இவர்களில் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments