
இந்த இராணுவ கோப்ரல்கள் இருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேர குறிப்பிட்டார்.
அண்மையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளின்போது பள்ளிவாசல்களுக்கு சேதம் விளைவித்ததாக கைதுசெய்யப்பட்ட 02 கோப்ரல்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கண்டி வன்முறைகளின்போது முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட உடைமைகளும், சொத்துகளும் பெருமளவில் சேதமாக்கப்பட்டதுடன், தீயிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
சம்பவத்துடன் தொடர்புடைய மகாசோன் பலகாயவின் தலைவர் அமித் விரசூரிய உள்ளிட்ட 10 சந்தேகநபர்கள் ஏற்கனவே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
வன்முறைச் சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இதேவேளை, இந்த வன்முறைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்
துள்ளது.

