உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கனடாவில் பாரிய விபத்து : 14 கனிஷ்ட ஐஸ் ஹொக்கி வீரர்கள் பலி...

கனடாவில் கனிஷ்ட ஐஸ் ஹொக்கி வீரர்கள் பயணித்த பஸ்சுடன் லொரியொன்று மோதியதில் 14 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனை கனேடிய பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

கனேடிய கனிஷ்ட ஐஸ் ஹொக்கு குழு - பி.பி.சி.


விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பஸ்ஸில் 28 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது.

இதில் 14 பேர் உயிரிழந்ததுடன், ஏனைய 14 பேரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த ஐஸ் ஹொக்கி வீரர்களின் பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அதேநேரம் பாரிய விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் தாம் பிரார்த்திப்பதாகவும் கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

No comments