உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

21 ஆம் அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரத் தயார் - தமிழ், சிங்களம் அரச கரும மொழிகள்

தமிழ் - சிங்களம் இரண்டு மொழிகளையும் அரச கருமமொழியாக உள்ளடக்கி, 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர எண்ணியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிடுகின்றார்.

அரச கருமமொழிக் கொள்கை மீறப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் மற்றும் மொழிப் பிரச்சினைகள் குறித்து அறிவிப்பதற்காக மொழிகளுக்கான நிலையமொன்று ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மனோ கணேசன் இதனைக் கூறினார்.

அமைச்சரவை மாற்றமொன்று விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சரின் உரை அமைந்திருந்தது.

மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றங்கள் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானிப்பார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரச கருமமொழிகள் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இருப்பின், கீழ்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும்.

Hotline - 1956
Viber / WhtsApp / IMO - 0714854734

No comments