கண்டி வன்முறை- 6 பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவான ஆறு உறுப்பினர்கள் கண்டி மற்றும் திகன வன்முறைகளுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக மேலும் நான்கு உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தொடர்பாகவும் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
வன்முறை தொடர்பான விசாரணைகளின்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்பாகவும் ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மெத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
திகன வன்முறைகளுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த மஹாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசூரிய உள்ளிட்ட 16 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இராணுவத்தில் கடமையில் இருக்கும் இரண்டு உத்தியோகத்தர்களும் அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்
No comments