உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பிரதமர் - ஜனாதிபதிக்கு இடையில் முக்கிய சந்திப்பு

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக பேச்சுவார்தை நடத்தும் பொருட்டு ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் இன்றும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மீது கூட்டு எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கும் இடையில் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இணக்கம் காணப்பட்டுள்ளது/

இந்த சந்திப்பு கொழும்பு 7 இலிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக ஶ்ரீலஙகா சுதந்திர கட்சிின் அமைச்சர்கள் பிற்பற்றுகின்ற நிலைப்பாடுகள் குறித்து இந்த சந்திப்பின்போது ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் வினவினர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பல்வேறு தரப்புகளாலும் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களை ஐக்கிய தேசியக் கட்சியி்ன் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கூறியுள்ளார்.

இன்னும் சில தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இன்றும் ஐப்பிய தேசியக் கடசியின் அமைச்சரவை அமைச்சர்களுடன் சந்தித்து பேசுவதற்கு ஜனாதிபதி கூறியிருந்தார்.

தேசிய அரசாங்கத்தை தொடந்தம் முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய வேலைத்திட்டம் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்னை மிகவும் சாதகமான முறையில் அமைந்திருந்ததாக ஐக்கிய தேசி கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும், கல்வியமைச்சருமான அகில விராஜ் காரியவசம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்றிரவு ஜனாதிப யை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அவரிடம் கோரிக்கையை விடுப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 42 பேர் ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக அந்த கட்சி வட்டாரத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments