உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ரஷ்ய முன். உளவாளியின் மகள் யூலியா வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றம்

பிரித்தானியாவில் நஞ்சூட்டப்பட்ட ரஷ்ய முன்னாள் உளவாளி செர்ஜீயின் மகள் யூலியா ஸ்கிரிபல் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
33 வயதான யூலியா சலிஸ்பரி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதுடன், அவரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

யூலியாவுக்கான சிகிச்சைகள் இன்னும் நிறைவு பெறவில்லை எனினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பு குறிப்பிடுகின்றது.

எனினும், யூலியாவின் தந்தை செர்ஜீ தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரின் உடல்நிலை சிறிது சிறிதாகவே தேறிவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி பிரி்த்தானியாவில் வைத்து ஒருவகை நச்சுப்பதார்த்த தாக்குதலுக்கு இலக்காகி ரஷ்ய முன்னாள் உளவாளி செர்ஜீ மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments