உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

சம்பந்தனின் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை - குழுக்களின் பிரதித் தலைவர்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்ற எதிர்கட்சி வரிசையில் அமர தீர்மானித்தால், இரா. சம்பந்தனின் எதிர்கட்சித் தலைவர் பதவி பறிபோகலாம் என குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கின்றார்.

எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரப் போவதாக கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர்.

நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் எதிர்கட்சித் தலைவர் பதவி​யை தம்வசப்படுத்த மஹிந்த ஆதரவு எதிரணி முயற்சித்து வருகின்றது.

எனினும், அண்மையில் பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தது.'

எவ்வாறாயினும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்திருக்கும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள எதிர்கட்சித் தலைவர் பதவி பறிபோக மாட்டாது என்றும் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை எதிர்கட்சித் தலைவராக கொண்டுவரும் ஒரு முயற்சியாகவே எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மீதான கூட்டு எதிரணியின் நம்பிக்கையில்லா பிரேரணை காணப்படும் எனவும் குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மேலும் குறிப்பிடுகின்றார்.

No comments