உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

பொதுநலவாய போட்டிகள் - பதக்கப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்து முன்னிலை

அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட்டில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இன்றைய 6ஆம் நாள் வரையான பதக்கப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது.49 தங்கம், 38 வௌ்ளி மற்றும் 42 வெண்கல பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 129 பதக்கங்களுடன் அவுஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 24 தங்கம், 28 வௌ்ளி, 21 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 73 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

10/04/2018 வரை பதக்கங்கள்

இந்தியா மூன்றாம் நிலையில் உள்ளதுடன், 11 தங்கம், 4 வௌ்ளி, 6 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை இதுவரை தங்கப் பதக்கம் எதனையும் வெற்றிகொள்ளவில்லை என்பதுடன், ஒரு வௌ்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் கென்யாவுடன் 23 ஆவது இடத்தைப் பகிர்ந்துள்ளது.

இதுதவிர தெற்காசிய நாடுகளான பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியன இலங்கைக்கு அடுத்த நிலைகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments