உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இலங்கை வந்துள்ள ஈரான் சபாநாயகர், சபாநாயகர் கரு ஜயசூரிய சந்திப்பு

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் சபாநாயகர் அலி லரிஜானி சபாநாயகர் கருஜயசூரியவை சந்தித்து கலந்துரையாடினார்.


இந்த சந்திப்பு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில்  நேற்று மாலை (19) இடம்பெற்றது.

ஈரான் சபாநாயகர் தலைமையிலான 36 பேரடங்கிய தூதுக்குழு நேற்றிரவு நாட்டிற்கு வருகை தந்தது.

இலங்கையில் 3 நாட்களுக்கு தங்கியிருக்கும் இந்த தூதுக்குழு நாளை நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.

இலங்கை வந்துள்ள ஈரான் தூதுக்குழுவினர் சபாநாகர் கருஜயசூரியவை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்து உரையாடினார்கள்.

இதன்போது இரு நாடுகளுக்கும இடையிலா சுற்றுலா மேம்பாடு, பாராளுமன்ற தொடர்புகளை வலுவூட்டல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

இந்த காலப்பகுதியில் பிரதமருக்கும் ஈரானிய சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments