உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்தோர் மீது ஐ.தே.க.வினால் நம்பிக்கையில்லா பிரேரணை

பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த நல்லாட்சி அரசிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று (06) நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.



இதற்கமைய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 16 பேர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளன.

அமைச்சர்களுக்கான சிறப்புச் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு, தொடர்ந்தும் அந்த பதவிகளை வகிப்பதற்கான தார்மீக உரிமைகளும் அவர்களுக்கு இல்​லை.

எவ்வாறாயினும், ஆளுங்கட்சியைப் பிரநிதித்துவப்படுத்துகின்ற, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய ஶ்ரீலசுக உறுப்பிகளுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய தேசிய கட்சியின்15 உறுப்ப்னர்கள் கையொப்பம் இட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

இரவில் விஜேராம மாவத்தையிலும், காலையில் மஹ கமசேகர மாவத்தையிலும் கால்களை ஊன்றியிருக்கும் சிலபேருடன் தொடர்ந்தும் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லமுடியும் என்ற நம்பிக்கை தமக்கில்லை என்பதால், இந்த 16 பேருக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக ஐககிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கின்றார்.

அத்துடன் அரசாங்கம் மீது நம்பிக்கையில்லாத தரப்பினரை அரசாங்கத்தில் வைத்திருப்பது பொருத்தமானது அல்லவென்பதை நம்பிக்கையில்லா பிரேரணைகள் மூலம் தௌிவுபடுத்தியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் குறிப்பிடுகின்றார்.

No comments