உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுமாறு ஐ.தே.க.வினருக்கு பிரதமர் அறிவுரை

நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுமாறு பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பனர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் ஏழு  பேர் மீது தனித்தனியே நம்பிக்கையில்லா பிரேரணைகளை கட்சியின் 21 உறுப்பினர்களது கையொப்பத்துடன் ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பித்திருந்தனர்.

எவ்வாறாயினும், இது கட்சியின் தீர்மானம் இல்லை என்பதால் பின்வரிசை பாராளுன்ற உறுப்பினர்களுக்கு அதனை வாபஸ் பெறுமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.

அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, எஸ்.பி. திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி, டபிள்யூ.டி.ஜே. செனவிரட்ன மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு எதிராகவே நம்பிக்கையில்லா பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிட்னி ஜயரத்ன, ஆஷு மாரசிங்க மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைகள் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

No comments