உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இளவரசர் ஹரி திருமணம் : ஒபாமா, ட்ரம்ப் உட்பட அரசியல்வாதிகளுக்கு அழைப்பில்லை

பிரித்தானிய அரச குடும்பத்தின் திருமண நிகழ்விற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் எவருக்குமே அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரியவருகின்றது.


இளவரசர் ஹரி மற்றும் மெகான் மார்க்லே இருவருக்கும் எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானி அரச குடும்பத்தின் முடிக்குரிய இளவரசர் வரிசையில் ஐந்தாம் நிலையில் இளவரசர் ஹரி உள்ளார்.

அரச குடும்ப திருமணம் நடைபெறவுள்ள தேவாலயத்தின் அளவு மற்றும் அமைவு கருதி குறிப்பாக அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அரச குடும்ப தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும், இளவரசர் ஹரியுடன் நெருக்கமாகவுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா மற்றும் அவரது பாரியார் மிச்.

செல் ஒபாமா இருவருக்கும் கூட அழைப்பு விடுக்கப்படவில்லை.

திருமணத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 1,200 பொது மக்களில், 2017 இல் மென்செஸ்டர் அரங்கத்தில் பாடசாலை மாணவர்களின் நிகழ்வொன்றிற்கு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதில் காமடைந்த 12 வயது சிறுமியும் அடங்குகின்றார்
மென்செஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுமி


No comments