உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கண்டி வன்முறைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன் பிரகாரம் தாக்குதலுக்கு இலக்கான பகுதிகளுக்கு விஜயம் செய்து  பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.



வன்முறைகளின்போது பாதிக்கப்பட்ட மற்றும் இது தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ள தரப்பினரிடம் இருந்து தகவல்களும், சாட்சியங்களும் எழுத்து மூலம் திரட்டப்படவுள்ளன.

இந்த விடயங்களை சமர்ப்பிக்கும்போது மூன்று பக்கங்களுக்கு மேற்படாத வகையில் தெரிவிப்பதற்கு சம்பந்தப்பட்ட நாள் மற்றும் இடம், நேரம், அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

நிழற்படங்கள், காணொளிகள் அல்லது குரல் பதிவுகளையும் இதன்போது சமர்ப்பிக்க முடியும்.

எழுத்து மூலமான இந்த விடயங்களை சமர்ப்பிக்கும்போது அவற்றை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:

பிரதேச இணைப்பு அதிகாரி,
கண்டிப் பிரதேச அலுவலகம்,
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,
இலக்கம் 8/1; பிரிம்ரோஸ் வீதி,
பேராதனை வீதி – கண்டி

எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு. 081 22 28 00 9 அல்லது 07 03 65 49 01 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்

No comments