உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ஐ.தே.க. தலைமைத்துவத்தில் மாற்றமில்லை..

கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் மேற்கொள்ளத் தேவையில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் இன்றைய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி உறுதிப்படுத்தினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தலைமைப் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

செயற்குழு தீர்மானம் தொடர்பாக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் அலரி மாளிகையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை பிரதிநிதித்துவப்படும் அனைவரும் கலந்துகொண்டனர்.

No comments