உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

பேஸ்புக் தளத்திற்கு புதிய சட்டங்களை விதிக்க ஏற்பாடு

பேஸ்புக் பாவனையாளர்களின் தரவுகளைப் பாதுகாப்பதற்காக இதனைவிட சிறந்த மேலும் பல வழிமுறைகளை நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் இருந்ததாக பேஸ்புக் நிறுவன நிறைவேற்றதிகாரி மார்க் ஸக்கர்பர்க் கூறியுள்ளார்.

அவர் இந்த விடயத்தை எழுத்துமூலம் அமெரிக்க செனட் சபைக்கு அறிவித்துள்ளார்.



இதுதவிர மார்க் ஸக்கர்பர்ட் அமெரிக்க சட்ட வல்லுநர்களையும் நேற்று (09) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தம்முடைய பொறுப்புகள் குறித்து பரந்தளவிலான பார்வையை செலுத்துவதற்கு தாம் தவறிவிட்டதாகவும், இது தம்மால் நேர்ந்த மிகப் பெரிய பிழை எனவும் குறிப்பிட்டுள்ள ஸக்கர்பர்க், இதற்காக தன்னை மன்னிக்குமாறும் கேட்டுள்ளார்.

பேஸ்புக் தளத்தை ஆரம்பித்து அதனை தாமே வழிநடத்திச் செல்வதாகவும் கூறிய அதன் நிறுவுநர், அதில் இடம்பெறும் அனைத்து விடயங்களுக்கும் தாமே பொறுப்புக் கூறவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்திற்குள் உரிய பதிலை மார்க் ஸக்கர்பர்க் வழங்குவதற்கு தவறும்பட்சத்தில், அமெரிக்க காங்கிரஸ் சபையினால் பேஸ்புக் தளத்திற்கு கடுமையான ஒழுங்குபடுத்தலுக்கான சட்டம் கொண்டுவர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக் நிறுவனத்தில் பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்காக 15,000 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த வருட இறுதிக்குள் அந்த பணிக்குழுவின் எண்ணிக்கையை 20,000 வரை உயர்த்துவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இலாபம் ஈட்டுவதை விட பாவனையாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் செயற்பட வேண்டியது மிக அவசியமானது என்றும் ஸக்கர்பர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாதாந்தம் 2.1 பில்லியன் பேர் பேஸ்புக் கணக்ககுகளைப் பயன்படுத்துகின்றமை தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் தினங்கள் பேஸ்புக் நிறுவனத்திற்கும், அதன் உரிமையாளருக்கும் மிகவும் களைப்பான ஒரு காலமாக அமையும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments