உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

10 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 8 பிரதியமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்..

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்றும் இடம்பெற்றது.

அதற்கமைவாக , 10 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 8 பிரதியமைச்சர்களுக்கு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

பிரதி அமைச்சர்கள் 
1. அமீர் அலி - மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம்

2. துனேஷ் கன்கந்த  - காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

3. ரஞ்சன் ராமநாயக்க  - சமூக வலுவூட்டல்

4. எச்.எம்.எம்.ஹரீஸ்  - அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி

5. கருணாரத்ன பரனவித்தான  - விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள்

6. சாரதி துஷ்மந்த  - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

7. பாலித தெவரப்பெரும  - பேண்தகு அபிவிருத்தி, வன சீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி

8. மனுஷ நாணயக்கார  - தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்

9. முத்து சிவலிங்கம்  - உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி

10. செய்யித் அலி ஷாஹீர் மௌலானா  - தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள்

இராஜாங்க அமைச்சர்கள்
1. பாலித்த ரங்கே பண்டார  - நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் இடர் முகாமைத்துவம்

2. திலிப் வெதஆரச்சி  - மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி

3. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா  - பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி

4. மொஹான் லால் கிரேறு  - உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள்

5. சம்பிக்க பிரேமதாச  - பெருந்தோட்டக் கைத்தொழில்

6. லக்ஷ்மன் செனவிரத்ன  - விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள்

7. திருமதி. ஸ்ரீயானி விஜேவிக்ரம  - விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

8. வீரகுமார திசாநாயக்க  - மகாவலி அபிவிருத்தி

No comments