உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கண்டி வன்முறைகள் தொடர்பில் திலும் அமுனுகமவிடம் 12 மணித்தியால விசாரணை

கண்டி வன்முறைகள் தொடர்பாக கூட்டு எதிர்கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம் பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் 12 மணித்தியாலம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கண்டி, திகன, அம்பதென்ன உள்ளிட்ட பிரதேசங்களில் மார்ச் மாத முற்பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதுதொடர்பாக மஹாசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 37 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் ஒருகட்டமாக பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு வருமாறு இன்று (15)அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் இரவு 11.30 அளவில் திலும் அமுனுகம பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிலிருந்து வௌியேறினார்.

விசாரணைகளின் பொருட்டு தன்னுடைய கையடக்கத் தொலைபேசியை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றதாக கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்


No comments