உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

புதிய அமைச்சர்கள் 18 பேர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சரவைக்குரிய 18 அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இதுதொடர்பான நிகழ்வு இன்று (01/05/2018) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக கபீர் ஹாசிமும்,
பொது நிர்வாக முகாமைத்துவ மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டாரவும்,
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக திருமதி தலதா அத்துக்கொறளையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்துறை மற்றும் வடமேல் மாகாண அமைச்சராக எஸ்.பி.நாவின்னவும்,
பொது நிறுவனங்கள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக லக்ஷ்மன் கிரியெல்லவும்,
விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்;ச்சி திறன் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலையக மரபுரிமைகள் அமைச்சராக சரத் அமுனுகமவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீரவும்,
நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கல் முகாமைத்துவ அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக துமிந்த திசாநாயக்கவும்,
சமூக வலுவூட்டல் அமைச்சராக பி.ஹரிசனும், விளையாட்டுஇ மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சித்துறை அமைச்சராக பைசல் முஸ்தபாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்;.

ஏனைய அமைச்சுப் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லையென ஜனாதிபதி ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது..

தேசிய சகவாழ்வு , நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சராக மனோ கணேசனும்,,
செயற்றிட்ட முகாமைத்துவ, இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரட்னாயக்கவும்,
மீள்குடியேற்ற,புனர்வாழ்வளிப்பு,வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சராக டி.எம்.சுவாமிநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடி, நீரியல் வழங்கல் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சராக விஜித் விஜயமுனி சொய்ஸாவும்,
சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சராக தயா கமகேயும்,
நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சராக ரவீந்திர சமரவீரவும்,
உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்க்ள அமைச்சராக விஜயதாச ராஜபக்ஷவும்,நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments