உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

3 மணித்தியாலத்திற்கு முன் விமான நிலையம் வருமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல்

மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


ஶ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் இந்த அறிவுறுத்தலை தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ளது.

விமானம் புறப்படுவதற்கு மூன்று மணித்தியாலம் முன்னதாக பயணிகள் விமான நிலையத்தை வந்தடை வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

குடிவரவு - குடியகல்வு உத்தியோகத்தர்கள் இன்று (17) முதல் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாகவே ஶ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரிங்களை தவிர்க்கும் நோக்கில் பயணிகளுக்கான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன விமான சேவைகள் நிறுவனத்தின் ஊடாக அதிகாரி தீபால் வி. பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments