மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதை விரைவுபடுத்துவதற்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழ் ஏழு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள், வீதிச் சட்டங்கள், திட்டமிட்ட குற்றங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள், சுற்றுலா பொலிஸ் பிரிவு என பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த நிரந்தர பொலிஸ் குழுக்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஏழு உறுப்பினர்களின் கீழ் இயங்கும் என்று ஆணைக்குழுவின் தலைவர் பி.எச். மனதுங்க தெரிவித்துள்ளார்.
இவ் விடயங்களுகளுக்குப் பொறுப்பான அமைச்சுகள், அரச நிறுவனங்களின் பிரதானிகளையும் இணைத்துக்கொண்டு அடையாளம் காணப்படுகின்ற அடிப்படை பிரச்சினைகளை ஆராய்ந்து, அதன் பின்னர் தீர்வுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
கலந்துரையாடி மேற்கொள்ளும் தீர்வுகள் குறித்த பரிந்துரைகளை பொலிஸ் மாஅதிபரின் கவனத்திற்கு இந்த ஏழு குழுக்களும் கொண்டுவரவுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மனதுங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

