உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

HARROW இல் மேயரான கரீமாவுக்கு கண்டியில் கௌரவம்..

ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஹரோ பிராந்திய மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த (திருமதி) கரீமா மரிக்கார் அவர்களுக்கு நாளை (06/08/2018) கண்டி மாநகர சபையில் விசேட வரவேற்பளிக்கப்படவுள்ளது.

கண்டி மாநகர மேயர் கேசர சேனாநாயக்கவின் தலைமையில் கண்டி மாநகர சபை மண்டபத்தில் நாளை மாலை 3 மணியளவில் இந்த வரவேற்கு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட கரீமா மரிக்கார், கண்டி பெண்கள் உயர்தர கல்லூரியின் பழைய மாணவி ஆவார்.

ஹரோ நகரின் முதல் முஸ்லிம் பெண் மேயராக தெரிவாகியுள்ள கரீமா மரிக்கார், ஹரோ நகரை 2010 முதல் பிரதிநிதித்துவப்படுத்தி வந்துள்ளதுடன், மேயர் பதவியிலிருந்து மார்கரட் டேவின் ஒய்வுபெற்றதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தொழில் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மேயர் தெரிவுக்கான போட்டியில், கன்சர்வேட்டிவ் கட்சியின் கிறிஸ் மோட்டை கரீமா தோற்கடித்துள்ளார்.

ஹரோ மேயர் கரீமா மரிக்கார் கடந்த 28 வருடங்களாக ஹரோவில் வாழ்ந்து வருகின்றதுடன், தனது பதவியைக் கொண்டு சமூகத்திற்கான சேவைகளை உரியவாறு முன்னெடுப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளமை குறி்பபிடத்தக்கதாகும்.

No comments