உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

மேலும் 04 கொரோனா நோயாளர்கள் அடையாளம் - மொத்த எண்ணிக்கை 82 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்ட 04 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயலணி நிலையத்தில் வைத்து  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க இந்த தகவலை உறுதிப்படுத்தியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்பிரகாரம் இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த மொத்த எண்ணிக்கையில் முதலில் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டு பின்னர் குணமடைந்த சீனப் பெண்ணும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments