உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளான 102 பேர் இதுவரை அடையாளம்

இலங்கையில் கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்ட 102 பேர் இன்றைய தினம் வரை பதிவாகியுள்ளனர்.

இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பகுதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று மாலை 6.30 க்கு 102 பேர் எனப் பதிவாகியது.

இவர்களில் இருவர் ஏற்கனவே பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வௌியேறிச் சென்றனர்.

இந்த நிலைமையின் கீழ், இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றும் சுகாதார அமைச்சு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

No comments