உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

ஊரடங்குச் சட்ட விதிகளை மீறிய 180 பேர் கைது

ஊரடங்குச் சட்ட விதிகளை மீறியமைக்காக நாடளாவிய ரீதியில் 180 பேர் இன்று (21/03/2020) கைது செய்யப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக 20 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் இன்று இரவு  (21/03/2020) 9.00 மணிவரை இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டிலுள்ள வெவ்வேறு பொலிஸ் நிலையப் பிரிவுகளில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதிகளில் நடமாடியதன் காரணமாகவே அதிக எண்ணிக்கையானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதுதவிர விளையாட்டு மைதானமொன்றில் கூட்டமாக ஒன்றுகூடி மதுபானம் அருந்தியமை, வாகனப் போக்குவரத்தில் ஈடுபட்டமை, உணவகமொன்றை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டமை, மதுபோதையுடன் வீதியில் நடமாடியமை மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்குச் சட்ட விதிகளை மீறியமைக்காக கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments