உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் - மொத்த எண்ணிக்கை 106 ஆக உயர்வு

கொவிட்-19 என்ற கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் இன்றைய தினம் (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வௌியிட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்வடைந்துள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளாகி, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் தங்கியிருந்தவர்களில் இதுவரை 06 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தொற்று காணரமாக இலங்கையில் இதுவரை உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றும் சுகாதார அமைச்சு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

No comments