உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 132 ஆக உயர்வு

கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் இன்றைய தினம் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று (31) காலை வரையில் 122 ஆகவே பதிவாகியிருந்தது.

எனினும், இன்றைய தினம் அக்குரணையில் 03 பேரும், பேருவளையில் 6 பேரும், தெஹிவலையில் ஒருவருமாக 10 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கொரோனா வைரஸ் வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 02 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 17 பேர் சிகிச்சைகளின் பின்னர் பூரண குணமடைந்துள்ளனர்.

எனவே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 113 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 173 பேர் வைத்தியசாலைகளில் தங்கவைக்கப்பட்டு வைரஸ் தொற்று தொடர்பில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் நிலைமை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments