உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொவிட்-19 சுகாதார பாதுகாப்பு நிதியத்திற்கான பொறுப்புகள் ஒப்படைப்பு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த சமூக நலன் பேணல் பணிகளை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பல்வேறு பொறுப்புக்களை வழங்கியுள்ளார்

இந்த நிதியத்தை கடந்த திங்கட்கிழமையன்று ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி நிதியத்திலிருந்து 100 மில்லியன் ரூபாவை அதற்கென வழங்கியிருந்தார்.


அதற்காக இலங்கை வங்கியின் நிறுவன கிளையில் தனியாக விசேட கணக்கொன்று திறக்கப்பட்டது. அதன் கணக்கிலக்கம் 85737373 ஆகும்.

நிர்வாக, நிதி மற்றும் வங்கித் துறையில் உயர் திறமைகளுடன் கூடிய தொழில் வல்லுனர்களை கொண்ட சபையொன்றின் மூலம் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் முகாமைத்துவம் செய்யப்படும்.

சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் நோக்கள் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையூடாக தௌிவுபடுத்தப்பட்டுள்ளது,No comments