ஊரடங்குச் சட்டத்தை மீறிய 790 பேர் கைது...
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்ட விதிகளை மீறியமைக்காக நாடு முழுவதுமுள்ள பொலிஸ் பிரிவுகளினால் இதுவரை 790 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்ட காலப்பகுதியில் இன்று (22) மாலை 5 மணிவரை இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
அத்துடன் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 154 வாகனங்களையும் பொலிஸார் இந்த காலப்பகுதியில் கைப்பற்றியுள்ளனர்.
ஊரடங்குச் சட்டத்தை மீறும் வகையில் வீதிகளில் நடமாடிய குற்றத்திற்காகவே பெரும்பாலானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments