இத்தாலியில் ஒரேநாளில் 969 அதிகூடிய உயிரிழப்புகள் பதிவு
Pic Courtesy: BBC https://www.bbc.com/news/world-europe-52067673 |
இதனையடுத்து இத்தாலியில் இதுவரை 9,134 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தொற்றிலிருந்து உயிர்களைப் பாதுகாப்பது மிகவும் அவசரமான ஒரு சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என உலக சுகாதார ஸ்தாபன தலைவர் டொக்டர் டெ்ரஸ் அதனோம் கெப்ரீசஸ் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி மிக மோசமாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இத்தாலி முழுவதும் முடங்கிப் போயுள்ளதுடன், தத்தமது வீடுகளுக்குள்ளேயே தொடர்ந்தும் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை இத்தாலியில் கட்டுப்பாடுகளை நீடிப்பதற்கான தேவை ஏற்படும் என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Pic Courtesy: BBC https://www.bbc.com/news/world-europe-52067673 |
No comments