உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

புலனாய்வு அறிக்கையிடல் பயிலுநர் ஊடகவியலாளர்களுக்கான விருது விழா

ஶ்ரீலங்கா புலனாய்வு அறிக்கையிடலுக்கான நிலையத்தின் (CIRSL) 14 முதல்கட்ட பயிலுநர் ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கல் வைபவம் கொழும்பில் நாளை (10/03/2020) இடம்பெறவுள்ளது
புலனாய்வு ஊடகவியல் தொடர்பான பயிற்சிகளை நிறைவுசெய்த 14 ஊடகவியலாளர்களுக்கு இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

அத்துடன் இவர்களில் இருந்து நிபுணத்துவக் குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட மூன்று சிறந்த பயிலுநர் ஊடகவியலாளர்களுக்கு பாகிஸ்தானின் கராச்சியில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள Mobile Journalism குறும் கற்கை நெறியில் கலந்துகொள்வதற்கான வௌிநாட்டுப் பயண புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளமை முக்கிய அம்சமாகும்.

இந்த விருது வழங்கல் வைபவம் கொழும்பு, கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள ஓஸோ ஹோட்டலில் நாளை காலை 9.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கைக்கான ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வு அறிக்கையிடல் பயிலுநர் பயிற்சிகள் துறைசார் நிபுணர்களைக் கொண்டு ஶ்ரீலங்கா புலனாய்வு அறிக்கையிடல் நிறுவனத்தினால் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் நான்கு மாதங்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஶ்ரீலங்கா புலனாய்வு அறிக்கையிடல் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த புலனாய்வு அறிக்கையிடல் பயிற்சிகளுக்கு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் சர்வதேச ஊடக ஒத்துழைப்புகளுக்கான அமைப்பு ஆகியன அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments