உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம்

யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர் ஒருவர் இன்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அடையாளம் காணப்பட்ட நோாயளரை தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரி. சத்தியமூர்த்தி kandytamilnews.com க்கு உறுதிப்படுத்தினார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோயாளர்களின் இரத்த பரிசோதனை மாதிரிகளின் முடிவுகள் நாளைய தினமே (23) கிடைக்கப் பெறும் என்றும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments