உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

அவசர நோயாளர்களுக்கு வீட்டிற்கே மருந்து (லிங்க் / படவிளக்கம்)

கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நோயாளர்களுக்கான அவசர மருந்துகளை தத்தமது வீடுகளுக்கே பெற்றுக் கொள்ளும் சில வழிமுறைகளை சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு வௌியிட்டுள்ளது.

இதற்கமைய நாடளாவிய ரீதியாக பதிவுசெய்யப்பட்டுள்ள சில மருந்தகங்களின் பெயர் விபரங்கள் உத்தியோகபூர்வமாக அமைச்சின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் வசிப்பிடங்களை அண்மித்துள்ள மருந்தகங்கள் தொடர்பாக தகவல்களையும், தொடர்புகொள்ளும் தொலைபேசி, வட்ஸ்அப் மற்றும் வைபர் இலக்கங்களை கீழேயுள்ள லிங்க் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்

இங்கே அழுத்தவும்..
List of State Osu-Sala and Pharmacies

அத்துடன் நோயாளர்கள் தங்களின் மருந்துச்சீட்டுகளை குறிப்பிட்ட மருந்தகங்களின் வட்ஸ்அப் மற்றும் வைபவர் இலக்கங்களுக்கு அனுப்பிவைப்பதன் ஊடாக ஒன்லைன் முறையில் அல்லது நேரடியாக கட்டணம் செலுத்தி உரிய மருந்து வகைகளை கொள்வனவு செய்யமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மருந்து விநியோக சேவைக்காக நியாயமான கட்டணமொன்றும் உங்களிடம் இருந்து அறவிடப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்.No comments