உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய உதவத் தயார்- இராணுவத் தளபதி

அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுடன் சந்திப்பு

கொரோனா தொற்றுக்கு இலக்காகி முஸ்லிம்கள் எவரேனும் மரணி்க்க நேர்ந்தால், அவர்களின் ஜனாசாக்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்வதற்காக, தன்னால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா உறதியளித்துள்ளார்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தியுடன் இராணுவத் தலைமையகத்தில் இன்று (31) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த உறுதியை இராணுவத் தளபதி வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான முஸ்லிம்களின் ஒத்துழைப்புகள், சமூகத்துடன் இணைந்து செயற்படல், வைரஸ் பற்றிய விழப்புணர்வை மேலும் அதிகரித்தல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தனது கடமையல்லாத போதிலும், கொரோனா வைரஸினால் முஸ்லிம்கள் எவரேனும் உயிரிழந்தால், அவர்களின் ஜனாஸாக்களை முறைப்படி நல்லடக்கம் செய்வதற்காக தாம் உதவி புரிவதாக இராணுவத் தளபதி இதன்போது கூறியுள்ளார்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் மேலும் சில அங்கத்தவர்களும் இராணுவத் தளபதியுடனான கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

இந்த சந்திப்பையடுத்து கருத்து தெரிவித்த ரிஸ்வி முப்தி, தாம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறுவதற்காக, குறிப்பாக தஹஜ்ஜத் தொழுயிலும், ஐந்து நேர தொழுகைகளிலும் அல்லாஹ்விடம் முஸ்லிம்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments