உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொரோனா வைரஸால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மற்றுமொரு நோயாளர் இன்று (30) உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

64 வயதுடைய ஒருவரே வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையினுள் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் ஆவார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 14 பேர் இதுவரை பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளனர்.

இதன் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட 106 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments