உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொரோனா அச்சம் - பாதுகாப்பு தரப்பினால் அட்டுளுகம கிராமம் முடக்கம்

களுத்துறை – அட்டுளுகம கிராமம் முழுமையாக பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அந்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே அந்த கிராமத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 26 குடும்பங்களைச் சேர்ந்த 200 க்கும் அதிகமானவர்கள் அந்த கிராமத்தில் தத்தமது இருப்பிடங்களுக்குள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

அட்டுளுகம கிராமத்திற்குள் உள்ளவர்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளிநபர்கள் கிராமத்திற்குள் பிரவேசிப்பதற்கோ பாதுகாப்புத் தரப்பினர் தடைவிதித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்புத் தரப்பினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments