உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் விஷமிகள் போலி செய்தி பரப்புவதற்கு முயற்சி - கடும் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் எச்சரிக்கை

திருகோணமலை பிரதேசத்தில் அமைந்துள்ள சிவன் ஆலயமொன்றிற்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக இன்று (28) அதிகாலை முதல் பரவிய தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென தெரியவந்துள்ளது.

சிவன் ஆலயத்தின் கோபுரத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களிலும், தொலைபேசி ஊடாகவும் இன்று அதிகாலை 3 மணிமுதல் தகவல் பரவ ஆரம்பித்தது.

இதனையடுத்து நாட்டிலுள்ள இந்துக்கள் மத்தியில் ஒருவித குழப்பத்துடன் கூடிய அச்சநிலை ஏற்பட்டுள்ளதுடன், பல்வேறு இடங்களில் அதற்கான பரிகாரங்களிலும் மக்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த தகவல் குறித்து ஊடகங்களும், ஊடகவியலாளர்களுக்கும் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பொலிஸாருடன் தொடர்புகொண்டு விசாரித்தபோது, அத்தகைய சம்பவமொன்று இடம்பெறவில்லை என்றும், முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் உறுதிசெய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையிலான போலித் தகவல்களை பரப்புவோர் குறித்து பல தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் வௌியிடப்பட்டு வருகின்றன.

இதேவேளை, நாட்டில் வதந்திகளைப் பரப்புவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் சிவன் ஆலய கோபுரத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பாக வினவியபோதே பொலிஸார் இதனைக் குறிப்பிட்டார்.

1 comment: