உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளர் பூரண குணத்துடன் வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றம்

இலங்கைக்குள் முதலாவதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய சுற்றுலா வழிகாட்டி பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து  இன்று (23) வௌியேறினார்.

இந்த நபர் குணமடைந்த பின்னர் மேலும் இரண்டு நாட்கள் வைத்தியசாலையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டதாக IDH வைத்தியசாலையி வட்டாரம் தெரிவிக்கின்றது.

வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வாகனத்தில் அவர் தனது வீட்டை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டதுடன், மேலும் இரண்டுவார காலம் வீட்டில் தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவு ஆரம்பித்து 71 நாட்களின் பின்னரே இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments