உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

பிரித்தானியாவில் அனைவருமே கொரோனா ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்

பிரித்தானிய சுகாதார செயலாளர் மெட் ஹான்கொக் மற்றும் பிரதமர் பொரிஸ் ஜொன்சன்


பிரித்தானியாவில் அனைவருமே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஆபத்தை எதிர்நொக்கியுள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் மெட் ஹான்கொக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானமை உறுதிசெய்யப்பட்டதை அ
டுத்து அவர் இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.

நாட்டின் அரச மட்டத்திலும், பொதுவான வகையிலும் அனைவருமே சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், பொரிஸ் ஜொன்சன் தொடர்ந்தும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு பொறுப்புக்கூறும் நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கென 33,000 வைத்தியசாலை கட்டில்கள் ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தற்போதைக்கு சுமார் 6200 பேர் அந்த நாட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்காக பர்மிங்ஹாம் மற்றும் மென்செஸ்டர் ஆகிய பிரதேசங்களில் இரண்டு நைட்டிக்கேல் வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments