உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள தனியார் பங்குதாரர்களுக்கு மஹிந்த நன்றி தெரிவிப்பு

கோவிட்-19 என்ற கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ள தனியார்த்துறை பங்குதாரர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

ஜோன் கீல்ஸ் மற்றும் ஹேமாஸ் ஆகிய தனியார்த்துறை நிறுவனங்களுக்கு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைதள பக்கத்தில் பிரதமர் நன்றிகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று தொடர்பில் சந்தேகத்திற்கு உள்ளாகின்றவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களாக பயன்படுத்துவதற்கு தங்களது கட்டடங்களை வழங்குவதற்கு முன்வந்தமைக்காகவே பிரதமர் இவ்வாறு நன்றிகளை வௌியிட்டுள்ளார்.

இந்த ஒத்துழைப்புகள் காரணமாக சந்தேகத்திற்கிடமின்றி அரசாங்கத்தின் சுமை இலகுவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments