உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்ட நோயாளர் ஒருவரின் மரணம் பதிவாகியுள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் நோயாளர் ஒருவரே கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் சிறுநீரக மாற்று அறுவை செய்துகொண்ட இந்த நபர் நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.No comments