உண்மைக்கு முதலிடம்...

உண்மைக்கு முதலிடம்...

Breaking News

BREAKING: ​கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களி்ல் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதேதினம் பிற்பகல் 2.00 மணிக்கு அந்த மூன்று மாவட்டங்களிலும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படுவதுடன், அன்றைய தினமே பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு, மறுநாள் 24 ஆம் திகதி செவ்வாக்கிழமை காலை 6.00 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படும்.

இந்த அனைத்து மாவட்டங்களுக்குமான ஊரடங்குச் சட்டத்தை மீண்டும் அமுல்படு்த்துவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது..

அத்துடன் விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தங்களில் செய்கை நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கு இடமளிக்குமாறு பொலிஸாருக்கு அரசாங்கத்தினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை போதுமானளவு களஞ்சியப்படுத்தி வைத்துள்ளதால், அநாவசியமாக பொருட்களை சேகரித்து வைப்பதற்காக முனைப்புக் காட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை தடையின்றி பெற்றுக் கொள்ளும் வகையில் விநியோக நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


No comments